என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புனித தோமையார்"
- ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.
- கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆத்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான புன்னக்காயல் புனித தோமையார் ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலியை சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன் அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்தது. 14-ந் தேதி காலை 9 மணிக்கு புன்னக்காயல் பங்கு தந்தை தா.சகாய அந்தோணி டைட்டஸ், உதவி பங்குத்தந்தை விமல் ஆகியோர் திருப்பயணிகளுக்கான சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். இந்த ஆலயம் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ளதால் ஏராளமானவர்கள் வெளியூர்களில் இருந்து படகுகள் மூலமும், ஆற்று தண்ணீரில் இறங்கி நடந்தே சென்றும் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி சிறுமலர் குறுமட அதிபர் உபர்ட்டஸ் அடிகளார் நடத்தினார். நேற்று காலை 10-ம் நாள் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னாள் உடன்குடி பங்குத்தந்தை விக்டர் லோபோ அடிகளார் தலைமை நடத்தினார். திருப்பலி மறையுரையை தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கத்தின் நிதி நிர்வாகி ஜான் சுரேஷ் அடிகளார் நிகழ்த்தினார். காலை 10 மணியளவில் ஆலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் புனித தோமையாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற்றது.
இதில் புன்னக்காயல், ஆத்தூர், மரந்தலை, ஏரல், முக்காணி, குருவித்துறை, குரும்பூர், தூத்துக்குடி, ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் ஊர் கமிட்டியினர் செய்து இருந்தனர்
- திரளான மக்கள் பங்கேற்பு
- இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழாகடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றிவைத்தார்.
திருவிழா வை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷமாலைஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.9-ம் திருவிழாவான நேற்றுகாலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிக ளுக்கான திருப்பலிநடந்தது.
புதுக்கிராமம் பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமன் தலைமையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார். மாலை6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடந்தது.காரங்காடு பங்கு அருட்பணியாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்டணம்பங்கு அருட்பணியாளர் பபியான்ஸ் அருளுரை ஆற்றினார்.
இரவு 9 மணிக்கு புனித தோமையார் சொரூ பத்துடன் சப்பரப்பவனி தொடங்கியது. நள்ளிரவு வரை வீதி, வீதியாக இந்த சப்பரபவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார்.
காலை 7.30மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணி யாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞானபிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ்அருளுரை ஆற்றினார்.
காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.இதில்சின்ன முட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்குஅருட்பணி பேரவை துணைத்த லைவர்அ ந்தோணி செப ஸ்தியான், செயலாளர்தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லி ன்மற்றும் பங்குஅருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள்கலந்து கொண்டனர்.
மாலை 6 மணிக்கு திருக்கொடிஇறக்கம்மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர், பங்கு அருட்பணிபேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- 8-ந்தேதி முதியோர், நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.
- 9-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.
சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு நவநாள், திருக்கொடிப்பவனியைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றினார்.
திருவிழா நாட்களில் நவநாள், திருப்பலி, அருளுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 9-ம் நாள் திருவிழாவான வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.
தேர்ப்பவனி 10-ம் நாள் திருவிழாவான 9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்த் திருப்பலிக்கு அருட்பணி மரிய செல்வன் தலைமை வகித்து அருளுரையாற்றுகிறார். காலை 7.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு ஆலஞ்சி மறைமாவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் தூய ஞானப்பிரகாசியார் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரையாற்றுகிறார். இதனை பங்கு மக்கள், பங்குப்பேரவையினர் சிறப்பிக்கின்றனர். காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், அருட் பணியாளர் கில்டஸ், பங்குப்பேரவை துணைத்தலைவர் அந்தோனி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.
- கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.
- புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
அவினாசி – சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நேற்றுமாலை நடந்தது. முன்னதாக கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா தொடங்கியது. நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 8.30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.
திருப்பலி முடிவில், திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பாண்டு வாத்தியம் முழங்க, புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், நேற்று காலை 8 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கிராம மக்களின் சார்பில் புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தொன்போஸ்கோ மற்றும் இறைமக்கள், தோமையார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் சொரூபம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடு வீதியில் உயிர்த்த ஆண்டவர், தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் உயிர்த்த ஆண்டவர் ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் மந்திரிக்கப்பட்டது. பின்னர், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலையடிப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.
வையம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்